×

வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 

பந்தலூர், ஜூலை 11: பந்தலூர் அருகே சேரம்பாடியில் வனத்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு திறன் போட்டி நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி வனச்சரகம் சார்பில் தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மனித வனவிலங்கு மோதலை தடுப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமை வகித்தார்.

தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ் வரவேற்று பேசினார். சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். வனவிலங்குகளை காப்போம், வனவிலங்குகளிடமிருந்து நம்மையும் காப்போம், வனத்தை காப்போம், இயற்கை உன் நண்பன் போன்ற தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட திறன் போட்டிகளை நடத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சேரம்பாடி வனச்சரக வனவர்கள் ஆனந்த், குமரன் மற்றும் வனத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் தமிழாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

The post வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Cherambadi ,Nilgiris ,Forest Department ,Dinakaran ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...